2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

இராணுவப் பிரிவுக்கு விண்ணப்பம் கோரல்

Niroshini   / 2020 டிசெம்பர் 24 , பி.ப. 12:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன், கீதாஞ்சன்

முல்லைத்தீவு மாவட்டத்தின் இராணுவ பிரிவில் காணப்படும் பல்வேறு வெற்றிடங்களுக்கு, ஆட்சேர்ப்புச் செய்வதற்கான விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது.

பயிலுனர்களை ஆட்சேர்ப்புச் செய்யும் பணிப்பாளர் சபை, இராணுவ முகாமினால், அவற்றுக்கான விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது.

இதன்படி படைவீரருக்கு உரித்தாகும் நலனோம்பல் வசதிகள் மற்றும் ஏனைய சிறப்புரிமைகள், அடிப்படை தகுதிகள், கொடுப்பனவுகளும் அடங்கலாக ஒவ்வொரு அலுவலருக்கும் உரிய மொத்த சம்பளம், நேர்முகப் பரீட்சைக்கு தேவையான சான்றிதழ்கள், படைவீரராக இராணுவத்தில் இணைவதால் கற்பதற்கு வாய்ப்பு கிடைக்கும்.

வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு கற்கை நெறிகள், ஆட்சேர்ப்புச் செய்யப்படும் தொழில்கள் என்பவற்றை உள்ளடக்கியதாக, குறித்த ஆட்சேர்ப்பு விண்ணப்பம் வெளியிடப்பட்டுள்ளது.

மேலதிக விவரங்களுக்கு, பயிலுனர்களை ஆட்சேர்ப்புச் செய்யும் பணிப்பாளர் சபையின் மாவட்ட இராணுவ உத்தியோகத்தர்களான கமால் (071 8645460 / 077 4983991), நிசாந்த (076 4572397) அல்லது முல்லைத்தீவு  மாவட்டச் செயலக மனித வலு மற்றும் வேலைவாய்ப்புத் திணைக்களம் (021 2291777) ஆகியவற்றுடன் தொடர்பு கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .