2025 மே 07, புதன்கிழமை

இராணுவம் வசம் இருந்த 11 ஏக்கர் காணிகள் கையளிப்பு

Niroshini   / 2021 ஒக்டோபர் 28 , பி.ப. 12:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

-செ. கீதாஞ்சன், சண்முகம் தவசீலன்

 

முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட 7ஆம் வட்டாரப் பகுதியில், இராணுவம் வசமிருந்த 11 ஏக்கர் காணிகளை விடுவிப்பதற்குரிய ஆவணத்தை, மாவட்டச் செயலாளர் க.விமலநாதனிடம், முல்லைத்தீவு மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் பிலப்பிட்டிய கையளித்துள்ளார்.

68ஆவது படைப்பிரிவு தலைமையத்தில் நடைபெற்ற நிகழ்வில் வைத்து. இந்த ஆவணத்தை, கட்டளைத் தளபதி கையளித்துள்ளார்.

இது குறித்து புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் எஸ்.ஜெயக்காந்தன் கருத்து தெரிவிக்கையில்,
புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட 7 ஆம் வட்டாரம் பகுதியில் அமைந்துள்ள 11 ஏக்கர் காணிகள், மாவட்டச் செயலாளரிடம் கையளிக்கப்பட்டுள்ளன என்றார்.

அதில் 10 ஏக்கர் காணிகள், புதுக்குடியிருப்பு கிழக்கு கிராம அலுவலகர் பிரிவிலும், ஒரு ஏக்கர் காணி சிவநகர் கிராம அலுவலகர் பிரிவிலும் உள்ளடங்கப்பட்டுள்ளன எனவும், அவர் தெரிவித்தார்.

புதுக்குடியிருப்பு கிழக்கில் உள்ள 10 ஏக்கர் காணிகளும் புதுப்புலவு பலநோக்கு கூட்டுறவு சங்கத்துக்கு சொந்தமாக இருக்கின்றன எனத் தெரிவித்த அவர், இந்த காணிகளின் உரிமைகள் தொடர்பில் மேலதிக நடவடிக்கையில் ஈடுபட வேண்டியுள்ளது எனவும் கூறினார்.

அதுவரை அந்த காணிகள் கிராம அலுவலகர் பொறுப்பில் விட்டு, கிராம அலுவலகர் அந்த காணிகள் தொடர்பிலான ஒழுங்குகளை மேற்கொண்டு அவற்றை எவ்வாறு வழங்குவது என்பது தொடர்பில் முடிவெடுத்து, அவற்றை உரிமையாளர்களுக்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும், அவர் தெரிவித்தார்.

இந்தக் காணிகளின் உரிமையாளர்கள், போருக்கு முன்னர்  நீண்டகாலமாக வாழ்ந்து வந்து, போராட்டங்களை மேற்கொண்டதில், 2017ஆம் ஆண்டில், ஒரு தொகுதி காணிகள், வீடுகள் விடுவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X