Niroshini / 2021 ஜூன் 22 , பி.ப. 01:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சண்முகம் தவசீலன்
இராணுவத்தினர் வெளியேறினால், முல்லைத்தீவு - ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட முத்துஐயன்கட்டு பலநோக்குக் கூட்டுறவு சங்க கிளை இல-2 கடையை திறக்க முடியுமென்று, முத்துஐயன்கட்டு பலநோக்குக் கூட்டுறவு சங்கத் தலைவர் தெரிவித்தார்.
முத்துஐயன்கட்டு இடது கரை பகுதியில் உள்ள குறித்த சங்க கடையை திறந்து, வியாபார நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
இது குறித்து மாவட்ட செயலாளர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரிடம் எழுத்து மூலம் கோரிக்கை விடுத்தும், குறித்த பகுதியில் இராணுவத்தினர் காவலரணொன்றை அமைந்திருப்பதை காரணம் காட்டி, குறித்த கிளை திறக்கப்படாது இருப்பதாகவும், அக்குதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், இது தொடர்பில், முத்துஐயன்கட்டு பலநோக்குக் கூட்டுறவு சங்கத் தலைவரிடம் வினவியபோதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .