2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

இராமேஸ்வரத்தில் மீனவர்கள் ஆர்ப்பாட்டம்

Niroshini   / 2021 ஜூன் 16 , பி.ப. 01:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

இலங்கை மீன் வளத்துறை அதிகாரிகளால், மீன்பிடி கடற்பரப்பில் பயன்பாட்டில் இல்லாத பஸ்கள் போடப்படுவதை கண்டித்து, இராமேஸ்வரம் மீனவர்களால், இராமேஸ்வரம் பஸ் நிலையத்துக்கு முன்னால், இன்று (16) காலை, ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது கருத்துத் தெரிவித்த ஆர்ப்பாட்டக்காரர்கள், தமிழக மீனவர்களின் மீன்பிடி தொழிலை தொடர்ந்து பாதிப்புக்குள்ளாக்கும் வகையில், இலங்கை அரசாங்கத்தால், கச்சத்தீவு, நெடுந்தீவு, நயினாதீவு ஆகிய கடற்பகுதிகளில், பயன்பாட்டில் இல்லாமல் கைவிடப்பட்ட இலங்கைப் போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பஸ்கள் இறக்கப்படுகின்றன எனச் சாடினர்.


'இவ்வாறு பஸ்கள் கடலில் இருக்கும் போது, கடல் மாசுபடுவதுடன், தமிழக மீனவர்கள் இந்திய கடற்பரப்பில் மீன் பிடித்தாலும், அவர்கள் விரிக்கும்; மீன்பிடி வலைகள் காற்றின் வேகம் காரணமாகவும் கடல் நீரோட்டம்; காரணமாகவும், இலங்கை கடற்பகுதிக்கும் செல்லக் கூடும்.

'இதனால் படகுகள் மற்றும் வலைகளை சேதமடைந்து, படகு ஒன்றுக்கு பல ஆயிரம் ரூபாய் நட்டம் ஏற்படும் என்பதால், உடனடியாக இலங்கை மீன் வளத்துறை,  இந்த திட்டத்தை கைவிட வேண்டும்' என்று, அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .