2025 நவம்பர் 11, செவ்வாய்க்கிழமை

இரு புதிய உறுப்பினர்கள் நியமனம்

Niroshini   / 2021 ஓகஸ்ட் 09 , பி.ப. 02:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன், நடராசா கிருஸ்ணகுமார்

வவுனியா நகர சபை மற்றும் செட்டிகுளம் பிரதேச சபை ஆகியவற்றுக்கு, 2 புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணி கட்சியின் சார்பில் போட்டியிட்ட ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் வவுனியா நகர சபை மற்றும் செட்டிகுளம் பிரதேச சபையின் இரு உறுப்பினர்கள் பதவி விலகியதை அடுத்து, அப்பதவிக்கு ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் செயலாளர் ந.சிவசக்தி ஆனந்தனால் மேலும் இருவர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பில், வவுனியா மாவட்டத் தேர்தல்கள் அலுவலகத்தால் அதி விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கமைய, வவுனியா நகரசபைக்கு திருமதி நிருபா சச்சிதானந்தனும் செட்டிகுளம் பிரதேச சபைக்கு பூலோகம் இந்திரனும் சட்டத்தரணி துரைசிங்கம் ஜெயானந்தன் முன்னிலையில் சத்தியபிரமாணம் செய்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X