Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 16, வெள்ளிக்கிழமை
Editorial / 2020 ஜூன் 08 , பி.ப. 06:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சண்முகம் தவசீலன், எஸ்.றொசேரியன் லெம்பேட்
இராமநாதபுரம் அருகே உள்ள ஆற்றங்கரை கடற்கரையில், 18 அடி நீளமும் ஒன்றரை டன் எடையும் கொண்ட சுறாமீன் ஒன்று, காயங்களுடன் இறந்த நிலையில், நேற்று (07) கரை ஒதுங்கியுள்ளது.
இதைத் தொடர்ந்து, கடல் வளத்துறையினர் அங்குச் சென்று பார்வையிட்டபோது, அது “வேல்ஷார்க்” எனப்படும் அரியவகை சுறா மீன் என்பது தெரியவந்துள்ளது.
இந்தச் சுறா மீன், படகுகளைப் புரட்டிப் போடும் அளவுக்கு பலம் வாய்ந்ததெனவும் ஆழ்கடல் பகுதியில் மட்டுமே, இது வசிக்குமெனவும் கடல் வளத்துறையினர் தெரிவித்தனர். இந்தச் சுறா மீன் சுமார் 35 தொடக்கம் 40 வயதைக் கொண்டதெனத் தெரிவித்ததாகவும் ஆண் சுறா மீன் எனவும் பலவீனமாகக் காணப்பட்ட இந்தச் சுறா, காற்றின் வேகம் அதிகமாகக் காணப்பட்டமையால், பாறையில் மோதி உயிரிழந்துள்ளதாகவும், மிருக வைத்தியரின் பிரேத அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
35 minute ago
39 minute ago
1 hours ago