2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

இறுதி கலந்துரையாடல்

Editorial   / 2020 பெப்ரவரி 25 , பி.ப. 12:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மு.தமிழ்ச்செல்வன்

கிளிநொச்சி - இரணைமடுக்குளத்தின் கீழ் உள்ள சிறுபோக நெற்செய்கைக்கான இறுதி கலந்துரையாடல், கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில், மாவட்டச் செயலாளர் ரூபவதி கேதீஸ்வரன் தலைமையில், இன்று (25) நடைபெற்றது.

இதன்போது, இரணைமடுக்குளத்தின் கீழ், 15,000 ஏக்கரில் சிறுபோக நெற்செய்கை மேற்கொள்ளலாமெனவும் உப பயிர்ச்செய்கையாக உழுந்து, கௌப்பி, பயறு, நிலக்கடலை போன்ற பயிற்செய்கைகளை  மேற்கொள்ளலாமெனவும் தீர்மானிக்கப்பட்டது.

அத்துடன், சிறுபோகப் பயி​ர்ச்செய்கை மேற்கொள்ளும் இடத்தில் இருந்து சுமார் 500 மீட்டர் தூரத்தில் உள்ள காணியை, கால்நடை வளர்ப்பாளர்கள் தங்களது கால்நடைகளுக்கான மேய்ச்சல் தரவையாகப் பயன்படுத்த வேண்டுமென்றும் முடிவெடுக்கப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .