Niroshini / 2021 ஒக்டோபர் 26 , பி.ப. 01:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சுப்பிரமணியம் பாஸ்கரன்
கிளிநொச்சி மேற்கு நீர்ப்பாசனத் திணைக்களத்தின் கீழ் உள்ள 5 குளங்களின் இறுதி விதைப்பு, எதிர்வரும் 31ஆம் திகதியுடன் நிறைவுறுத்தப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி மாவட்டத்தின் மேற்குப் நீர்ப்பாசனத் திணைக்களத்தின் கீழுள்ள அக்கராயன் குளம், வன்னேரிக்குளம், புதுமுறிப்புக்குளம், கரியாலை நாகபடுவான் குளம், குடமுருட்டிகுளம் ஆகிய குளங்களின் கீழ், 2021/2022 கால பயிர்செய்கை தொடர்பில் எடுக்கப்பட்ட தீர்மானத்துக்கு அமைவாக, எதிர்வரும் 31ஆம் திகதிக்கு முன்னர், பயிர்ச்செய்கை நடவடிக்கைகளை நிறைவேற்றப்பட வேண்டும் என்று, பயிர்ச்செய்கை குழுவால் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேற்பட்டி பயிர்ச் செய்கை நடவடிக்கைகள், கடந்த மாதம் 5ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டு மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதாவது, அக்கராயன் குளத்தில் குளத்தின் கீழ், 2,887 ஏக்கர் நிலத்திலும் கரியாலை நாகபடுவான் குளத்தின் கீழ், 1,505 ஏக்கர் நிலத்திலும் குடமுருட்டி குளத்தின் கீழ், 650 ஏக்கரிலும் புதுமுறிப்புக் குளத்தின் கீழ், 985 ஏக்கர் நிலத்திலும் வன்னேரிகுளத்தின் கீழ், 363 ஏக்கரிலும் வழமைபோன்று காலபோகச் செய்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
59 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
59 minute ago
2 hours ago