Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2020 ஓகஸ்ட் 19 , பி.ப. 03:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.றொசேரியன் லெம்பேட்
மன்னாரில் வைத்து ஒருவரிடம் 60 ஆயிரம் ரூபாய் இலஞ்சம் பெற்றக் குற்றச்சாட்டில், இலங்கை போக்குவரத்து சேவையின் வட பிராந்திய முகாமையாளர், இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளால் இன்றைய தினம் காலை கைது செய்யப்பட்டுள்ளார்.
மன்னார் போக்குவரத்து சாலையின் பின் பகுதியில் வைத்து இலஞ்சம் பெற்ற போதே, கைது செய்யப்பட்டுள்ளார்.
நபர் ஒருவரிடம் முறைப்பாடு ஒன்றை சீர்செய்வதற்கு என குறித்த முகாமையாளர் 60 ஆயிரம் ரூபாய் பணத்தை இலஞ்சமாக பெற்ற நிலையில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைதுசெய்யப்பட்ட இலங்கை போக்குவரத்து சேவையின் வட பிராந்திய முகாமையாளர் மன்னார் பொலிஸ் நிலையத்தில் மேலதிக விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரனைகளை மன்னார் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
விசாரணைகளின் பின் குறித்த நபர் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
6 minute ago
24 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
24 minute ago