2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

இலவச குறும்படம், புகைப்பட பயிற்சிநெறி ஆரம்பம்

Niroshini   / 2016 ஓகஸ்ட் 15 , மு.ப. 11:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலகத்தின் கலாசார பிரிவினரால் ஆறு மாதங்கள் கொண்ட முழுநேர பயிற்சி நெறியாக குறும்படம் மற்றும் புகைப்பட பயிற்சி  நெறிகள்  ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இன்று திங்கட்கிழமை காலை பத்து மணிக்கு கரைச்சி பிரதேச செயலகத்தில் கலாசார உத்தியோகத்தர் கு.றஜீவன் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டுள்ள  இப்பயிற்சி நெறிக்கு முழுநேர பயிற்சிக்கு இருபது மாணவர்களும் பகுதிநேர பயிற்சிக்கு இருபது மாணவர்களும் முதற்கட்டமாக சேர்த்துக்கொள்ளப்பட்டுள்ளனர்.

முற்றிலும் இலவசமாக ஆறு மாதங்களுக்கு  இந்திய மற்றும் உள்ளுர் வளவாளர்களால் பயிற்சிகள்   அளிக்கப்பட்டு சான்றிதழ்கள் வழங்க்கப்படவுள்ளது. வட மாகாணத்தில்  முதல் முதலாக ஒரு பிரதேச செயலகத்தில் இவ்வாறான பயிற்சி ஆரம்பிக்கப்படுவது இதுவே எனத் தெரிவிக்கப்படுகிறது.

இதற்கான முழுமையாக நிதி அனுசரணையை வேல்ட் விசன் நிறுவனம் வழங்கியிருக்கிறது. அத்தோடு காவேரி கலாமன்றமும்  இதற்கான அனுசரணையை வழங்கியுள்ளனர்.

இந்த ஆரம்ப நிகழ்வில் கரைச்சி பிரதேச உதவி பிரதேச செயலர் சிவகாமி, மாவட்ட கலாசார உத்தியோகத்தர் அருட்செல்வன், வேல்ட்விசன் நிறுவன அதிகாரி மற்றும் கலைஞர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .