2025 ஓகஸ்ட் 09, சனிக்கிழமை

’இலவச போக்குவரத்துச் சேவை தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும்’

Editorial   / 2017 டிசெம்பர் 24 , பி.ப. 01:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

வவுனியா மாவட்டத்தில், புதிதாக  அமைக்கப்பட்ட மத்திய பஸ் நிலையத்தில் இருந்து அனைத்து பஸ் சேவைகளும் ஏற்கெனவே திட்டமிட்டபடி நாளை (25) காலை தொடக்கம் ஆரம்பிக்கப்பட்டு தொடர்ந்து நடை பெறவுள்ளதாக,  வவுனியா மாவட்ட தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தின் தலைவர் எஸ்.ரி. இராஜேஸ்வரன் (ரஞ்சன் ) தெரிவித்தார்.

மேலும், வவுனியா நகரப் பகுதியில் இருந்தும் புதிய பஸ் நிலையத்தில் இருந்தும் இலவச போக்குவரத்துச் சேவையை வவுனியா மாவட்ட தனியார் பஸ்கள் மூலம் தொடர்ச்சியாக தினசரி அதிகாலை 4.30 மணியில் இருந்து இரவு 7.30 மணி வரை நடை பெறவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அத்துடன், பயணிகளுக்கு இந்தப் போக்குவரத்து சேவையின்போது ஏதாவது சிரமங்கள் ஏற்படுமிடத்து அல்லது  உதவிகள் தேவைப்படும் பட்சத்தில், 077 - 2417033 என்ற அலைபேசி இலக்கம் ஊடாகவோ அல்லது 024 -2227610 என்ற தொலைஇலக்கம் ஊடாகவோ தொடர்பு கொண்டு தகவல்களையும் மற்றும் உதவிகளையும் பெற்றுக் கொள்ளமுடியும் எனவும் தெரிவித்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .