2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

இலுப்பை கடவைக் கிராம அலுவலர் தாக்கப்பட்ட பின்னர் உயிரிழப்பு

Gavitha   / 2020 நவம்பர் 04 , பி.ப. 01:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.றொசேரியன் லெம்பேட்

மாந்தை மேற்கு பிரதேசச் செயலகத்தின் கிராம அலுவலகர்களுக்கான பதில் நிர்வாக உத்தியோகத்தராகக் கடமையாற்றும் இலுப்பை கடவைக் கிராம அலுவலரான விஜி என்று அழைக்கப்படும் எஸ்.விஜியேந்திரன் (வயது-55) என்பவர், நேற்று (03) இரவு, மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார் என, பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில், சம்பவம் இடம்பெற்ற பகுதிக்கு, மன்னார் மாவட்ட பதில் நீதவான் இ.கயஸ் பல்டானோ, இன்று (04)  சென்று பார்வையிட்டதோடு, விசாரனைகளையும் முன்னெடுத்தார்.

இதன்போது, சட்ட வைத்திய அதிகாரி வைத்தியர் எஸ்.பிரனவன், திடீர் மரண விசாரணை அதிகாரி றொஜன் ஸ்ரலின் ஆகியோர் சம்பவ இடத்துக்குச் சென்றிருந்தனர்.

இதன்போது, உயிரிழந்த கிராம அலுவலகர் செலுத்தி வந்த மோட்டார் சைக்கிள், தலைக்கவசம் ஆகியவை இரத்தத்துடன் காணப்பட்டமையால், இது தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு, இலுப்பைக்கடவை பொலிஸாருக்கு, பதில் நீதவான் உத்தரவிட்டார்.

உயிரிழந்தவரின் தலை, உடல் பாகங்களில் பாரிய காயம் காணப்பட்டுள்ளதோடு, அவர் இனந்தெரியத நபர்களால், கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இவர், பள்ளமடு வைத்தியசாலைக்குக்கொண்டுச் செல்லப்பட்டு பின்னர், மேலதிக சிகிச்சைகளுக்காக, மன்னார் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார். எனினும் சிகிச்சைப் பலனின்றி அங்கு உயிரிழந்தார்.

உயிரிழந்தவர், மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவில் இடம்பெற்றுவரும் சட்ட விரோத மண் அகழ்வு உள்ளிட்ட சட்ட விரோத செயற்பாடுகளுக்கு எதிராக குரல் கொடுத்து வருகின்றமை தெரியவந்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .