2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

உடல்கூறு பரிசோதனை வெளியானது

Gavitha   / 2021 ஜனவரி 12 , பி.ப. 02:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

செ.கீதாஞ்சன்

முல்லைத்தீவு, முள்ளியவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாவல்காடு பகுதியில், டிசெம்பர்  30ஆம் திகதி மீட்கப்பட்ட மனித உடல் பாகங்கள் மீது முன்னெடுக்கப்பட்ட உடற்கூறு பரிசோதனையில், கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட அடையாளங்கள் இருப்பதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீதிமன்ற உத்தரவுக்கு  அமைய மீக்கப்பட்ட இந்த உடற்பாகங்கள், உடற்கூற்று பரிசோதனைக்காக, சட்டவைத்திய அதிகாரியாலும் தடையவியல் பொலிஸாராலும் எடுத்து செல்லப்பட்டுள்ளன. ஷ

இந்நிலையில், உடற்கூற்று பரிசோதனை அறிக்கையை, சட்டவைத்திய அதிகாரி முல்லைத்திவு மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார்.

அந்த அறிக்கையில், கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கொலைசெய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .