2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

உடையார்குளம் குளக்கட்டு உடைந்தது; முறிகண்டிகுளம் வெட்டப்பட்டது

Editorial   / 2019 டிசெம்பர் 03 , பி.ப. 12:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன், மு.தமிழ்ச்செல்வன்

வடக்கில் தொடர்ந்து நிலவும் மழையுடனான வானிலை காரணமாக, வவுனியா - உடையார்குளம் குளக்கட்டு உடைந்துள்ளது.

இதனால், 200 ஏக்கர் விதை நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், சுமார் 80 ஏக்கர் விதைக்கப்பட்ட வயல்கள் முற்றுமுழுதாக நீரில் மூழ்கியுள்ளன.

இதனால், விவசாயிகள்  பெரிதும் பாதிப்படைந்துள்ளனர்.

இதேவேளை, உடைபெடுக்கும் நிலையிலிருந்த முறிகண்டிகுளம், இன்று (03) வெட்டப்பட்டு அதன் மேலதிக நீர் வெளியேற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .