சுப்பிரமணியம் பாஸ்கரன் / 2018 ஏப்ரல் 11 , பி.ப. 01:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
“முல்லைத்தீவு மாவட்டத்தில் தொடர்ச்சியாக தமிழர்களின் நிலங்கள் அபகரிக்கப்படும் உண்மை உலகத்துக்கு தெரியவேண்டும். தெரியப்படுத்தப்பட வேண்டும்” என வடமாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன் கூறியுள்ளார்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்கள் மற்றும் சிங்கள மீனவர்களின் அத்துமீறல்கள் தொடர்பாக வடமாகாணசபை உறுப்பினர்கள் நேற்று(10) முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லை கிராமங்களுக்கு நேரில் சென்று ஆராய்ந்த பின்னர், ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே ரவிகரன் இவ்வாறு கூறினார்.
இதன்போது மேலும் அவர் கூறுகையில்,
“தமிழீழ விடுதலைப் புலிகளின் காலத்தில் முல்லைத்தீவில் அல்லது வடமாகாண எல்லையில் சிங்கள மக்களோ அல்லது பௌத்த விகாரைகளோ இருந்ததில்லை. ஆனால் இன்று பௌத்தர்களே வாழாத பகுதிகளில் சிங்கள குடியேற்றங்கள் இடம்பெறுகின்றன.
இதனடிப்படையில் கொக்கிளாய் பகுதியில் தமிழர் ஒருவருக்கு சொந்தமான நிலத்தில் விகாரை அமைக்கப்படுவதையும், கொக்கிளாய் இறங்குதுறையில், சிங்கள மீனவர்கள் சுதந்திரமாக சட்ட விரோத தொழில்களை செய்வதையும் நேரில் பார்த்துள்ளோம். இதேபோல் ஆமையன்குளம், முந்திரியை குளம் மற்றும் நாயாறு பகுதிகளுக்கும் சென்று அங்கே தமிழ் மக்களுக்கு சொந்தமான நிலங்கள் மற்றும் கரையோர பகுதிகள் சிங்கள மக்களால் ஆக்கிரமிக்கப்படுவதை அவதானித்துள்ளோம். இதன் ஊடாக முல்லைத்தீவு மாவட்டத்தில் தமிழ் மக்களுக்கு சொந்தமான நிலத்தை நல்லாட்சி அரசு என கூறிக்கொள்ளும் இந்த அரசும் அபகரித்துக் கொண்டிருக்கின்றது என்ற உண்மை உலகத்துக்குத் தெரிய வேண்டும். மாகாணசபை உறுப்பினர்களின் இந்த பயணம் ஊடாக முல்லைத்தீவு மாவட்டத்தில் தமிழ் மக்களின் காணிகளை அபகரிப்பதை இந்த அரசாங்கமும் நிறுத்த வேண்டும்” என்றார்.
4 hours ago
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago
5 hours ago