2025 ஓகஸ்ட் 23, சனிக்கிழமை

‘உதவித் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட வேண்டும்’

Editorial   / 2018 ஜூன் 18 , பி.ப. 05:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

அங்கவீனர்களாக உள்ள இளைஞர்களுக்கும் யுவதிகளுக்கும் ஏற்ற உதவித் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என, வடமாகாண முதலமைச்சர், நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

“சிறுவர்களைப் பாதுகாப்போம்” என்ற விசேட வேலைத்திட்டத்தின் கீழ் கிளிநொச்சியில், இன்று (18) நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு, உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

“மாற்றுத் திறனாளிகள் பலர், மக்களிடையே ஒரு மூலையில் கிடந்து அவ்வாறே வாழ்ந்து மடிந்த காலங்கள் இன்று மலையேறிவிட்டன. இன்று அவர்கள் மாற்று வலுவுடைய பிள்ளைகளாக இனங்காணப்பட்டு, அவர்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றவும் அவர்களுக்கான பயிற்சிகளை வழங்குவதற்கும் அரச பள்ளிகளும் தனியார் அமைப்புகளும் முன்வந்துள்ளன. உதாரணமாக சிவபூமி போன்ற அமைப்புகள் முனைப்புடன் செயற்பட்டு வருகின்றன. இவர்களுக்கான உதவிகள் வழங்கப்படுவது அரசாங்கத்துக்குரிய தார்மீகக் கடமையாகும்.

“பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள், யுவதிகள் உடலுறுப்புகளை இழந்து, அங்கவீனர்களாக எம்மிடையே வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். இவ்வாறான இளைஞர்களுக்கும் யுவதிகளுக்கும் ஏற்ற உதவித் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட வேண்டும்” என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X