Editorial / 2020 ஓகஸ்ட் 04 , மு.ப. 11:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
-க. அகரன்
நாடாளுமன்றத் தேர்தலுக்காக மாவட்டச் செயலகத்துக்கு வருகை தரும் உத்தியோகத்தர்களை, வவுனியா மாவட்டச் செயலகம் அசெளகரியத்துக்கு உட்படுத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது.
வவுனியா மாவட்டச் செயலகத்துக்குள் வாகனங்களை நிறுத்துவதற்கு போதுமான இடவசதிகள் இருந்த போதிலும், மாவட்டச் செயலகத்தில் இருந்து சுமார் 500 மீற்றர் தூரத்தில் உள்ள காமினி மகா வித்தியாலய மைதானத்தில், உத்தியோகத்தர்களின் வாகனங்களை நிறுத்தி வருமாறு, திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
முன்கூட்டியே இந்தத் தகவல் வழங்கப்படாமையால், கடமைக்கு சமூகமளித்த உத்தியோகத்தர்கள் பெரும் அசெளகரியத்துக்கு உள்ளாகியிருந்தனர்.
27 minute ago
38 minute ago
45 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
38 minute ago
45 minute ago
1 hours ago