2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

உப உணவுப் பயிர் நிலத்தில் நெல் பயிரிட தடை

Editorial   / 2020 பெப்ரவரி 13 , பி.ப. 01:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

 

கிளிநொச்சி மாவட்டத்தில் உப உணவுப் பயிர்ச் செய்கைக்கென ஒதுக்கப்பட்ட நிலங்களில் நெற்செய்கை மேற்கொள்ள முடியாதென, கிளிநொச்சி மேலதிக மாவட்டச் செயலாளர் எஸ்.ஸ்ரீமோகனன் தெரிவித்தார்.

கண்ணகைபுரம் கிராமத்தில், உப உணவுப் பயிர்ச் செய்கைக்கான கூட்டத்தில் தலைமையுரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்துரைத்த அவர், மாவட்டத்தில் கண்ணகைபுரம், பிரமந்தனாறு, கனகாம்பிகைக்குளம் என்பன உப உணவுப் பயிர்ச் செய்கைக்கான கிராமங்களாகக் காணப்படுவதாகத் தெரிவித்தார்.

இக்கிராமங்களில், உப உணவுப் பயிர்ச் செய்கையை மேற்கொள்ள வேண்டுமெனத் தெரிவித்த அவர், இதற்காகவே, மாவட்டச் செயலகம் கூட்டங்களை நடத்தி வருகிறதெனவும் கூறினார்.

எனவே, உப உணவுப் பயிர்ச் செய்கைக்கான நிலங்களில், நெற்செய்கை மேற்கொண்டால் அது சட்டங்களுக்கு முரணானதெனவும் உப உணவுப் பயிர்ச் செய்கைக்கென ஒதுக்கப்பட்ட நிலங்களில் நெற்செய்கை மேற்கொள்ள முடியாதெனவும், ஸ்ரீமோகனன் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .