2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

உமையாள்புரத்தில் திண்மக்கழிவுகளை சேகரிக்கும் திடல்

Niroshini   / 2016 ஓகஸ்ட் 21 , மு.ப. 09:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி - உமையாள்புரம் பகுதியில் 15 இலட்சம் ரூபாய் செலவில் திண்மக்கழிவுகளை சேகரிக்கும் திடல் அமைக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி நகரிலும் அதனை அண்டிய பகுதிகளிலும் கரைச்சி பிரதேச சபையினால் சேகரிக்கப்படும் கழிவுகள் கிளிநொச்சி - உமையாள்புரம் பகுதியில் திறந்த வெளியில் கொட்டப்படுவதாக பொதுமக்களால் குற்றஞ்சாட்டப்படுகின்றது.

இவ்விடயம் தொடர்பாக கரைச்சி பிரதேச சபையின் செயலாளர் கே.கம்சநாதனிடம் தொடர்புகொண்டு கேட்டபோது,

“கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட உமையாள்புரம் பகுதியில் பிரதேச செயலாளரால் வழங்கப்பட்ட பத்து ஏக்கர் நிலப்பரப்பினை கொண்ட பகுதியில் திண்மக்கழிவுகளை சேகரித்து அழிக்கும் திடல் பதினைந்து இலட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இதற்கான வீதி நுழைவாயில் என்பன அமைக்கப்பட்டுள்ளதுடன், சுற்று வேலியும் அமைக்கப்பட்டுள்ளது” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .