Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 ஜூலை 15 , பி.ப. 03:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.றொசேரியன் லெம்பேட்
கல்வி சமூகம் ஏற்பாடு செய்கின்ற நிகழ்வுகளில், போராட்டக் காலத்திலே, தனது கடமையின் நிமித்தம் சென்று உயிர் நீத்த ஆசிரியர்களுக்கு முதலில் அஞ்சலி செலுத்தியப் பின்னரே, இவ்வாறான நிகழ்வுகளை ஆரம்பிப்பது சாலச் சிறந்தது என, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.
மடு கல்வி வலயத்துக்குட்பட்ட பாடசாலைகளின் சாதனையாளர்களைக் கௌரவிக்கும் நிகழ்வு, கருங்கண்டல் றோமன் கத்தோலிக்க தமிழ்க் கலவன் மகா வித்தியாலயத்தில் நேற்று (14) நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,
உயிர்களை இழந்தோம், உடமைகளை இழந்தோம், எல்லாவற்றையும் இழந்தோமெனத் தெரிவித்த அவர், ஆனால் கல்வி ஒன்று தான் மிஞ்சியுள்ளதெனவும் குறிப்பிட்டார்.
எமது கஷ்டம் பிள்ளைகளைத் தொடரக்கூடாது என்ற நிலையில், பெற்றோர் செயற்படுகின்றனர். ஆகவே அவர்களை கடைசி நேரம் விரையில் பார்க்க வேண்டிய கடமை எங்களுக்கு இருக்கின்றதென, அவர் மேலும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .