2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

உரிமைப் போராட்டத்தை காட்டிக்கொடுத்தவர்கள் ’தமிழ்த் தேசியம் பேசுகின்றனர்’

Editorial   / 2019 ஜூன் 18 , பி.ப. 05:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

க.அகரன்

 

உரிமைக்கான போராட்டத்தைக் காட்டிக்கொடுத்தவர்கள், இன்று தமிழ்த் தேசியம் பேசுகின்றனரென, வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கே.கே. மஸ்தான் தெரிவித்தார்.

வவுனியா ஐக்கிய விளையாட்டுக் கழகத்துக்கான  விளையாட்டு உபகரணங்களை கையளிக்கும் நிகழ்வில் இன்று (18) கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்துரைத்த அவர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, எப்போது அரசாங்கத்துடன் முரண்பட்டு ஆதரவை வாபஸ் பெறுகின்றதோ, அன்றுதான் இந்த ஆட்சியில் மாற்றம் ஏற்படுமென்றும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு முண்டு கொடுத்துவரும் இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, தமிழ் மக்களின் உரிமையை தமிழ் தேசியக் கூட்டமைப்பு பெற்றுக்கொள்ள வேண்டுமெனத் தாம் கூறுவதை, சிலர் குறையாக நினைப்பதாகக் கூறினார்.

தாங்கள் தேசிய அரசாங்தக்தில் இருந்த காலத்திலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர், பங்காளிக் கட்சியாகவே இருந்தனரென்றும் எனினும், இந்தத் தொங்கும் நாடாளுமன்றத்தைப் பயன்படுத்தி உரிமையைப் பெறவில்லை என்பதே தமது கவலையென்றும் கூறினார்.

அபிவிருத்திகளுடன் உரிமையையும் பெறவேண்டும். உரிமையைப் பெறுவதற்கான முயற்சியையும் கட்டாயமாக எடுக்க வேண்டும் என்றும் கூறிய மஸ்தான் எம்.பி, தற்போதைய நிலைமையால் இனப்பிரச்சனைக்கான தீர்வையும் உரிமையையும் பெறமுடியாதுள்ளதாகச் சிலர் கூறுவதாகவும் அவ்வாறெனில், இவ்வளவு காலமும் என்ன செய்தார்கள் என அவர்களிடம் தான் கேட்பதாகவும் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .