Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 09, வெள்ளிக்கிழமை
Niroshini / 2021 ஜூன் 30 , மு.ப. 11:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.றொசேரியன் லெம்பேட்
மன்னார் மாவட்டத்தில், கொரோனா காரணமாக சுயதனிமைப்படுத்தப்படுகின்ற குடும்பங்களுக்கு, அரசாங்கத்தால் வழங்கப்படும் நிவாரணப் பொருள்கள் உரிய நேரத்தில், உரிய முறையில் கிடைப்பதில்லையென, மன்னார் நகர சபை உறுப்பினர் திருமதி சிறிதரன் அந்தோனியம்மா, இன்று (30) குற்றஞ்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக தொடர்ந்துரைத்த அவர், அரசாங்கத்தால் தனிமைபடுத்தப்பட்ட குடும்பங்களுக்கு உலருணவு பொருள்கள் கிடைப்பதாக நினைத்து, அரச சார்பற்ற நிறுவனங்களும் பொது அமைப்புகளும் தனிமைபடுத்தப்பட்ட குடும்பங்களை கருத்தில் கொள்வதில்லை என்றார்.
இதன் காரணமாக, தனிமைப்படுத்தப்பட்ட எத்தனையோ குடும்பங்கள் பட்டியினால் வாடி வருகின்றன எனத் தெரிவித்த அவர், தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்களுக்கு பத்தாயிரம் ரூபாய் பெறுமதியான உலருணவு பொருள்கள் வழங்குவதாக செய்திகள் வெளிவந்தாலும், மன்னார் மாவட்டத்தில் ஐயாயிரம் ரூபாய் பெறுமதியான உலருணவு பொருள்கள் மாத்திரமே வழங்கப்படுகின்றன என்றும் கூறினார்.
அதுவும் தனிமைப்படுத்தப்பட்டு பத்து நாள்கள் கடந்த பின்னரே, உலருணவு பொருள்களை வழங்குகின்றனர் என்றும், அவர் சாடினார்.
எனவே, மன்னார் மாவட்டத்தில் உள்ள சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டுமென்றும், திருமதி சிறிதரன் அந்தோனியம்மா, கோரிக்கை விடுத்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
39 minute ago
49 minute ago
50 minute ago
5 hours ago