2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

உறுதியற்ற வீடுகளை பெற்றதால் நிரந்தர வீடுகள் மறுப்பு

George   / 2016 ஓகஸ்ட் 19 , மு.ப. 05:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் மீள்குடியேற்றத்தின் பின்னர் கடந்த 2012ஆம் ஆண்டு இராணுவத்தினால் நிர்மாணித்து கொடுக்கப்பட்ட வீடுகள், மிக மோசமாக சேதமடைந்து காணப்படுகின்றன.
எனினும் இவ்வாறு வீடுகளை பெற்ற தங்களுக்கு நிரந்தர வீடுகளை வழங்குவதற்கு அதிகாரிகள் மறுத்துவருகின்றனர் என பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்துள்ளனர்.

கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் இராணுவத்தினரால் அமைத்து வழங்கப்பட்ட வீடுகள் தற்போது சேதமடைந்து காணப்படுகின்றன.

அதாவது முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் பிரதேச செயலர் பிரிவின் கீழ் உள்ள ஆரோக்கியபுரம், அமைதிபுரம் ஆகிய பகுதிகளிலும் கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சி பிரதேச செயலர் பிரிவின் கீழ் உள்ள ஆனைவிழுந்தான்குளம் பகுதியிலும் இவ்வாறு இராணுவத்தினரால் அமைத்து வழங்கப்பட்ட வீடுகள் கடந்த 4 ஆண்டுகளில் சேதமடைந்து காணப்படுகின்றன.

இந்நிலையில் தமக்கான நிரந்தர வீடுகள் இதுவரையில் வழங்கப்படவில்லை என்றும் நிரந்தர வீட்டுத்திட்டத்திற்கு விண்ணப்பித்தபோதும் தங்களுக்கு வழங்கப்பட்ட தற்காலிக வீடுகளின் பெறுமதி 10 இலட்சம் ரூபாய் என்றும் இதனால் நிரந்தர வீடுகள் வழங்க முடியாது எனவும் தெரிவிக்கப்பட்டு தமக்கான வீட்டுதிட்டங்கள் வழங்கப்படவில்லை என அம்மக்கள் தெரிவிக்கின்றனர்.

இராணுவத்தினால் அமைக்கப்பட்ட வீடுகள் உரிய முறையில் அமைக்கப்படவில்லை. தற்போது அவற்றின் சுவர்கள் உடைந்து விழும் நிலையில் காணப்படுகின்றன. மேலும் கூரைகளும் சேதமடைந்துள்ளன. தற்போது அந்த வீடுகளில் வாழ முடியாத நிலை காணப்படுகின்றது. என்றும் பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவிக்கின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .