2025 மே 05, திங்கட்கிழமை

உலங்குவானூர்தியில் வந்திறங்கிய ரவி

Freelancer   / 2022 ஓகஸ்ட் 02 , பி.ப. 12:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க விசேட உலங்குவானூர்தி மூலம் இன்று (2) காலை மன்னாருக்கு திடீர் விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார்.

இந்த திடீர் விஜயம் குறித்து ரவி கருணாநாயக்கவிடம் ஊடகவியலாளர்கள் வினவிய போது எவ்வித பதிலும் கூறாமல் அவ்விடத்தில் வந்த வாகனத்தில் ஏறி சென்று விட்டார்.

ரவி கருணாநாயக்கவுடன் T.S.F என அழைக்கப்படும் தனியார் கடல் உணவு உற்பத்தி நிலைய பிரதிநிதிகளும் வருகை தந்த நிலையில், அவர்களின்  வாகனத்திலேயே ரவி கருணாநாயக்க சென்றதை அவதானிக்கக்கூடியதாக இருந்தது. (R)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X