2025 மே 08, வியாழக்கிழமை

உளுந்து செய்கையில் மஞ்சள் நோய் தாக்கம்

Niroshini   / 2021 ஓகஸ்ட் 10 , பி.ப. 03:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

முல்லைத்தீவு - மாந்தை கிழக்கு, துணுக்காய் ஆகிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள உளுந்து செய்கையில், மஞ்சள் நோய் தாக்கம் அதிகரித்திருப்பதாக, விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

மாந்தை கிழக்கு, துணுக்காய் ஆகிய பகுதிகளில், இவ்வாண்டு சிறுதானிய செய்கையில் உழுந்து செய்கை அதிகளவில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இவ்வாறு  மேற்கொள்ளப்பட்டிருக்கும் உளுந்து செய்கையில் கூடுதலான பிரதேசங்களில், மஞ்சள் நோய் தாக்கம்  அதிகளவில் காணப்படுவதாக விவசாயிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

கடந்த காலங்களில் இந்த உளுந்து செய்கையானது வெற்றி அளித்திருக்கும் போதும், இம்முறை ஒரு பங்கஸ் நோய் தாக்கத்தால், உளுந்து செய்கையில் பாதிப்புகள் ஏற்பட்டிருப்பதாகவும், விவசாயிகளால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X