2025 ஜூலை 07, திங்கட்கிழமை

உழவு இயந்திரத்தைச் செலுத்திச் சென்ற இளைஞன் மீது பொலிஸார் தாக்குதல்

George   / 2016 செப்டெம்பர் 29 , மு.ப. 08:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

 

கிளிநொச்சி பகுதியில் உழவு இயந்திரத்தைச் செலுத்திச் சென்ற இளைஞர் மீது புதன்கிழமை (28) கிளிநொச்சிப் பொலிஸார் காட்டு மிராண்டித்தனமாக தாக்குதல் நடத்தியுள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

உழவு இயந்திரத்தைச் செலுத்திச் சென்ற குறித்த இளைஞனுக்கும் மற்றொரு வாகன சாரதிக்கும் இடையில் ஏ-9 வீதியில் வைத்து வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இவர்களை விலக்குவதற்காகச் சென்ற பொலிஸார், குறித்த இளைஞன் மீது கனத்த இரும்புச் சங்கிலியால் தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாக்குதலில் படுகாயமடைந்த இளைஞன், கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இளைஞன் தங்களைத் தாக்க வந்தமையால் அவர்மீது தாக்குதல் மேற்கொண்டதாக பொலிஸார் கூறினர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .