Editorial / 2018 ஏப்ரல் 23 , பி.ப. 01:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
அனுமதிப்பத்திரம் இன்றி, பலாலி தெற்கு பகுதியில், சுண்ணாம்புக் கல் ஏற்றிய, உழவு இயந்திரம் ஒன்றைக் கைபற்றிய காங்கேசன்துறை, பொலிஸ் பிராந்திய விசேட புலனாய்வு பொலிஸார், அதன் சாரதியியையும் கைது செய்தனர். இந்த சம்பவம் நேற்று முன்தினம் (21) இடம்பெற்றது.
சிவில் உடையில் கடமைப்புரியும், விசேட புலனாய்வு பொலிஸார், பலாலி தெற்கு பகுதியூடாக, சந்தேகத்திற்கிடமாகச் சென்ற, உழவு இயந்திரத்தினை மறித்து சோதனையிட்டபோதே, குறித்த இயந்திரம், அனுமதிபத்திரம் இன்றி சுண்ணாம்புக்கல் ஏற்றிச் சென்றமை கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை, அச்சுவேலி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
37 minute ago
2 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
37 minute ago
2 hours ago
3 hours ago
3 hours ago