Editorial / 2021 டிசெம்பர் 26 , மு.ப. 10:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
முல்லைத்தீவு, மாங்குளம் பகுதியில் மருத்துவமனையில் ஊசிபோட்ட தாதி ஒருவரின் அங்கத்தை தொட்ட குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட நபர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
கொரோனா தடுப்பூசியினை பெற்றக்கொள்ளசென்ற நபர் ஒருவர் தாதி ஊசிபோடும் போது தாதியின் இடுப்பினை பிடித்துள்ளார்.
இந்த சம்பவம் மருத்துவமனையில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் மாங்குளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து குறித்த நபர் கைதுசெய்யப்பட்டார்.
அதன் பின்னர், டிசெம்பர் 24 ஆம் திகதியன்று முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார். அதன் போது அவரை எதிர்வரும் 05 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தில் சுகாதார பிரிவினரால் பாதுகாப்பான மற்றும் இலகுவான முறையில் மக்களுக்கான தடுப்பூசிகள் ஏற்றப்பட்டுக்கொண்டிருக்கின்றன.
கொரோனா தடுப்பூசி ஏற்றும் போது எந்த தாக்கமோ, வருத்தமோ, இல்லாத நிலையில் மக்கள் தடுப்பூசியை பெற்று வருகின்றார்கள் இவ்வாறு தடுப்பூசியினை பெறசென்றவர் தனக்கு கையில் வலி ஏற்பட்டபோது அதனை தாங்கமுடியாமல் தாதியின் அங்கத்தினை பிடித்துள்ளதாக தெரியவந்துள்ளது.
7 hours ago
7 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago
8 hours ago