2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

ஊடகவியலாளரிடம் விசாரணை

Editorial   / 2019 ஓகஸ்ட் 06 , பி.ப. 05:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மு.தமிழ்ச்செல்வன்

கிளிநொச்சிப் பிராந்திய ஊடகவியலாளர் எஸ்.என். நிபோஜனிடம் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால், கொழும்பில், இன்று (06) மூன்று மணிநேரங்கள் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புள்ளவர் என்ற சந்தேகத்தின் பேரில், பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் தேடப்படும் நபர் ஒருவர், புலம்பெயர் நாடு ஒன்றிலிருந்து, அலைபேசி மூலம் அழைப்பை மேற்கொண்டு, ஊடகவியலாளர் நிபோஜனிடம் உரையாடியமை தொடர்பிலேயே, அவரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.

ஊடகவியலாளர் எஸ்.என்.நிபோஜன் பயன்படுத்தும் அலைபேசியின் சிம் அட்டை அவருடைய தந்தையாரின் பெயரில் உள்ளமையால், பயங்கரவாத தடுப்புப் பிரிவினர், அவரது தந்தையையும் விசாரணைக்காக, இன்று (06) கொழும்பு – 01இல் உள்ள அவர்களது அலுவலகத்துக் வருமாறு, அழைப்பாணை வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .