2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

ஊடகவியலாளருக்கு TID அழைப்பு

Editorial   / 2019 செப்டெம்பர் 19 , பி.ப. 01:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

முல்லைத்தீவு மாவட்டப் பிராந்திய ஊடகவியலாளர் சண்முகம் தவசீலனுக்கு, பயங்கரவாத விசாரணைப் பிரிவால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக கடிதம், பொலிஸார் ஊடாக ஊடகவியலாளருக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

பயங்கரவாத விசாரணைப் பிரிவால் முன்னெடுக்கப்படும் விசாரணையொன்று தொடர்பில் வாக்குமூலம் பெறுவதற்கே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக, அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கமைய, செப்டெம்பர் 25ஆம் திகதியன்று, முற்பகல் 10 மணிக்கு பயங்கரவாத விசாரணைப் பிரிவு 2ஆம் மாடியில், ஆஜராகுமாறும், அக்கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .