2025 ஓகஸ்ட் 09, சனிக்கிழமை

‘எங்களது பிரச்சினையைப் பயன்படுத்த வேண்டாம்’

Editorial   / 2018 ஜனவரி 01 , பி.ப. 02:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.என்.நிபோஜன்

 

“காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கு எவ்வித தீர்வையும் பெற்றுத்தாரதவர்கள், நடைபெறவுள்ள உள்ளூராட்சிமன்றத் தேர்தலில், இந்த விடயத்தை பிராசாரத்துக்கு  பயன்படுத்துவதைத் தவிர்த்துக்கொள்ள வேண்டும்” என, கிளிநொச்சி வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில், வடக்கு -  கிழக்கு காணாமல்  ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்கத்தினதும் கிளிநொச்சி  சங்கத்தினதும் தலைவியுமான யோகராசா கனகரஞ்சனி, இன்று (01)  ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது, தொடர்ந்து கூறியதாவது,

“யுத்தம் முடிவுக்கு வந்து எட்டு வருடங்களை கடந்த நிலையிலும் எங்களின்  காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களுக்கு எவ்வித தீர்வும் கிடைக்கவில்லை. நாங்கள் நம்பிய எங்களது பிரதிநிதிகளாலும் எங்களுக்கு ஏமாற்றம். இந்தப் புதிய வருடத்திலாவது, எங்களது  விடயத்தில்  அரசியல் தரப்பினர்கள்,  அக்கறைச் செலுத்த வேண்டும். காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உணர்வுகளை புரிந்துகொண்டு, நாட்டின் தலைவர் மற்றும் பிரதமர் ஆகியோர் உரிய பதிலை வழங்க வேண்டும். அதற்கு தமிழ் தலைமைகள் அழுத்தம் கொடுக்க வேண்டும்” என்றார்.

மேலும், “வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வைப் பெற்றுத்தர முடியாதவர்கள் எங்களின் பிரச்சினையை தேர்தல் காலங்களில் பிரச்சாரத்துக்காகப பயன்படுத்தக் கூடாது. அதனை காணாமல்  ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களான நாங்கள் விரும்பவும் இல்லை, அதை ஏற்றுக்கொள்ளமாட்டோம்” எனவும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .