Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 07, திங்கட்கிழமை
George / 2016 செப்டெம்பர் 21 , மு.ப. 10:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
கடந்த 16ஆம் திகதி இரவு ஏற்பட்ட தீயினால் முற்றாக எரிந்து அழிவடைந்துள்ள கிளிநொச்சி சந்தைப் பகுதிக்கு விஜயம் செய்த புளொட் தலைவரும், யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமாகிய தர்மலிங்கம் சித்தார்த்தன், வர்த்தக சங்கத்தைச் சேர்ந்த பிரமுகர்களுடன் நிலைமைகள் தொடர்பில் விரிவாக கலந்துரையாடியுள்ளார்.
இதன்போது வர்த்தக சங்கத்தினர் சில கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.
“மிகப்பெரியளவில் வங்கிகளில் கடன்பெற்று முதலீடு செய்தே இங்கு வியாபாரங்களை நடாத்தி வந்தோம். இப்போது எங்களால் அந்தக் கடனைத் தீர்க்க முடியாது. எனவே கடனை இல்லாமற் செய்வதற்கு வழிசெய்ய வேண்டும் அல்லது அந்தக் கடனைச் செலுத்துவதற்கு எங்களுக்கு ஒரு நீண்ட தவணையைப் பெற்றுத்தர வேண்டும்.
இந்த கடைகளை மீளக் கட்டியெழுப்புவது மிகவும் கடினமான காரியம். எனவே போதிய நிலப்பரப்பு இங்கு இருப்பதால் புதிய ஒரு சந்தைக் கட்டிடத்தை அமைத்துத் தரவேண்டும். புதிய சந்தைக் கட்டிடம் அமைத்துத் தருவதன்மூலமே இந்தப் பிரச்சினைக்கு ஒரு நிரந்தரத் தீர்வினைக் காணமுடியும், அத்துடன் இந்த அழிவுக்கு எமக்கு நஷ்டஈடு பெற்றுத்தர வேண்டும்” என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விடயங்களைக் கேட்டறிந்துகொண்ட தர்மலிங்கம் சித்தார்த்தன், இந்தக் கோரிக்கைகளை உரிய இடங்களில் முன்வைத்து அவற்றை நிறைவேற்றுவதற்கான முழுமையான அழுத்தத்தைக் கொடுப்பதாக வர்த்தகச் சங்கத்தினரிடம் தெரிவித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
5 hours ago
5 hours ago