Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 ஜனவரி 07 , பி.ப. 01:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.என்.நிபோஜன்
“கடந்த காலங்களைப் போன்றே, இங்கு நிலைமை காணப்படுகின்றது. எவ்வித முன்னேற்றமும் இல்லை” என, கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர் கரி ஆனந்தசங்கரி தெரிவித்தார். கிளிநொச்சிக்கான விஜயத்தை நேற்று (06) மேற்கொண்டிருந்த போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள், கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் மேற்கொள்ளும் போராட்டம் இடம்பெறும் பகுதிக்கு விஜயம் மேற்கொண்ட கரி ஆனந்தசங்கரி, ஆர்ப்பாட்டக்காரர்களுடன் கலந்துரையாடினார். இதன்போது, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள், கண்ணீர் மல்க ,அவரிடம் தமது பிள்ளைகள் தொடர்பில் கருத்துப் பரிமாறினர்.
அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில், “காணாமல் ஆக்கப்பட்டவர்களைச் சந்திப்பதற்காகத்தான், இன்று இங்கு வந்தேன். கடந்த காலங்களைப் போன்றே, இங்கு நிலைமை காணப்படுகின்றது. எவ்வித முன்னேற்றமும் இல்லை. இலங்கைக்கு வந்த கனேடிய உயர்ஸ்தானிகருடன் தங்கக் கிடைத்தது. இதன்போது, பல விடயங்கள் எடுத்துரைக்கப்பட்டன” என்றார்.
மேலும், இலங்கைப் பிரச்சினை விடயம் தொடர்பில், கனடா இறுக்கமான நிலைப்பாட்டைக் கடைப்பிடிக்கிறது எனவும், அவர் இதன்போது தெரிவித்தார்.
9 minute ago
4 hours ago
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
4 hours ago
5 hours ago
5 hours ago