Editorial / 2022 ஜனவரி 19 , மு.ப. 11:16 - 0 - {{hitsCtrl.values.hits}}

சுப்பிரமணியம் பாஸ்கரன்
கரைச்சி பிரதேச சபையால், ஏ9 வீதியில் புதிதாக நிர்மாணிக்கப்படவுள்ள கிளிநொச்சி பொது நூலகத்துக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு, நேற்று (18) காலை நடைபெற்றது.
கரைச்சி பிரதேச சபைத் தவிசாளர் அருணாசலம் வேழமாலிகிதன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் யாழ். இந்தியத் துணை தூதுவர் ராம ராஜேஸ், பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்தனர்.
கிளிநொச்சி,பிள்ளையார் கோவிலில் நடைபெற்ற விசேட வழிபாட்டைத் தொடர்ந்து, கரைச்சி பிரதேச சபை வளாகத்தில் அமைந்துள்ள திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து விழா இடம்பெறும் மண்டபத்துக்கு அதிதிகள் அழைத்து வரப்பட்டனர். தொடர்ந்து மங்கள விளக்கேற்றல் இடம்பெற்று, கிளிநொச்சி பொது நூலகத்துக்கான அடிக்கல் நாட்டப்பட்டது.
24 minute ago
5 hours ago
27 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
5 hours ago
27 Jan 2026