2025 ஓகஸ்ட் 09, சனிக்கிழமை

ஐ.தே.க மாவட்ட அலுவலகம் மன்னாரில் திறந்து வைப்பு

George   / 2017 மார்ச் 28 , மு.ப. 10:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்கவின் 68ஆவது பிறந்த தினமான, கடந்த வெள்ளிக்கிழமை, ஐக்கிய தேசியக் கட்சியின் மன்னார்  மாவட்ட அலுவலகம்  சம்பிரதாய பூர்வமாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.

மாவட்ட அமைப்பாளர் ஏ. சமீயூ முகம்மது பஸ்மி தலைமையில் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மீள் குடியேற்ற அமைச்சர் டி.எம். சுவாமிநாதனின் இணைப்புச் செயலாளர்  பிறைம்லஸ் கொஸ்ரா பிரதம அதிதியாக கலந்து கொண்டு குறித்த மாவட்ட அலுவலகத்தினை திறந்து வைத்தார்.

கட்சியின் மன்னார் தொகுதி நிர்வாகிகள், கட்சிக்கிளைகளின் தலைவர்கள், இளைஞர் அமைப்பு மற்றும் பெண்கள் அமைப்புக்களின் பிரதிநிதிகள், பிரதேச அமைப்பாளர்கள் மற்றும் பல பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .