Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை
George / 2016 ஓகஸ்ட் 22 , மு.ப. 08:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சுப்பிரமணியம் பாஸ்கரன், எஸ்.என்.நிபோஜன்
தமிழர் தாயகப்பகுதிகளில் சிங்கள பௌத்த மதத்தை பரப்பும் செயற்பாடுகளை எதிர்த்தும் அரசியல் கைதிகளின் விடுதலையினையும் வலியுறுத்தி ஐ.நாவை நோக்கிய நீதிக்கான நடைபயணம் திங்கட்கிழமை (22) கிளிநொச்சி ஆனையிறவில் இருந்து ஐ.நா செயலகம் வரை நடைபெற்றுள்ளது.
திட்டமிட்ட வகையில் தமிழர் தாயகப்பகுதிகளில் பௌத்த விகாரைகளையும் புத்த சிலைகளையும் நிறுவி, இராணுவ பலத்துடன் தமிழர் தாயகத்தில் சிங்;கள மயமாக்கலை எதிர்த்தும், இனத்தின் தனித்துவத்தை பாதுகாத்தும், தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையினை வலியுறுத்தியும், எமது உரிமைகளை வென்றெடுப்பதற்கானதும், காணாமல் போனவர்களுக்கு நீதி வேண்டியும் 'ஐ.நா நோக்கிய நீதிக்கான நடைபயணம்'என்ற தொனிப்பொருளில் இந்த நடைபயணம் முன்னெடுக்கப்பட்டது.
ஆனையிறவு உமையாள்புரம் ஆலயமுன்றலிலிருந்து ஆரம்பமான பேரணி, கிளிநொச்சி வரை சென்று கிளிநொச்சியில் அமைந்துள்ள ஐ.நா உயர்ஸ்தானிகர் அலுவலகத்தில் தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜரை கையளிக்கவுள்ளது.
கிளிநொச்சி மாவட்டத்தின் கிராம அபிவிருத்திச் சங்கங்களின் சமாசம் மற்றும் பொது அமைப்புக்களின் ஒன்றியம் ஆகியன இணைந்து ஏற்பாடு செய்த இந்த நடைபவனியில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா, சி.சிவமோகன் மற்றும் மாகாண சபை உறுப்பினர்கள், அரசியல் பிரதிநிதிகள்; உள்ளிட்ட பெருமளவானோர் கலந்துக்கொண்டிருந்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
5 hours ago
5 hours ago
8 hours ago