2025 மே 17, சனிக்கிழமை

ஒட்டுசுட்டானில் கவனயீர்ப்புப் போராட்டம்

Editorial   / 2020 பெப்ரவரி 21 , பி.ப. 01:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சண்முகம் தவசீலன் 

ஒட்டுசுட்டான் பிரதேச செயலகம் முன்பாக நேற்றைய தினம் ஒட்டுசுட்டான் சிவத்தொண்டர் சபை அங்கத்தவர்கள் சுமார் 15 பேர் வரை கவனயீர்ப்புப் போராட்டமொன்றில்  ஈடுபட்டிருந்தனர்.

நேற்று காலை 9 மணிமுதல் குறித்த கவனயீர்ப்புப் போராட்டம் சுமார் ஒரு மணித்தியாலம் இடம்பெற்றது.

போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது, ஒட்டுசுட்டான் பிரதேசத்தைச் சேர்ந்த மாணவர்களுடைய உரிமைகள் மறுக்கப்பட்டு இருப்பதாகவும் சிவன் கோயிலில் பண்ணிசை பாடும் உரிமை மறுக்கப்பட்டு இருப்பதாகவும் அதற்கு பதிலாக வவுனியா மாவட்டத்திலிருந்து பிள்ளைகளை வரவழைத்து  சிவன் கோவிலில் நிகழ்வு நடத்தப்படுவது தவிர்க்கப்பட வேண்டும் எனவும் எங்களுடைய பிள்ளைகளுக்கு சிவன்கோவிலில் தேவாரம் பாட கூடிய உரிமைகள் வழங்கப்பட வேண்டும் எனவும் கூறினார்.

அடுத்ததாக கலாசார உத்தியோகத்தர் முறையற்ற செயற்பாடுகள் சிலவற்றை செய்கின்றார். எனவே,  நல்லதொரு கலாசார உத்தியோகத்தர் நியமிக்கவேண்டும். கோவிலின்  உடைய கண்கள் மூடி மறைக்கப்படுகிறது. இது திறந்த நிலையில் பேணப்பட வேண்டும் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து தங்களுடைய கவனித்து போராட்டம் இடம்பெறுவதாகத் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .