2025 ஓகஸ்ட் 08, வெள்ளிக்கிழமை

ஒட்டுசுட்டானில் நடமாடும் சேவை

Yuganthini   / 2017 ஜூன் 26 , பி.ப. 04:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

ஜனாதிபதி செயலகத்தின் பணிப்புரைக்கமைய, ஒட்டுசுட்டான் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட 27 கிராம அலுவலர் பிரிவுகளிலும் உள்ள பொதுமக்களின் நலன் கருதி, நடமாடும் சேவையொன்று நடத்தப்படவுள்ளதாக, பிரதேச செயலாளர் யதுகுலசிங் அனுருத்தனன் தெரிவித்தார்.

“எதிர்வரும் ஜூலை மாதம் 1ஆம் திகதி சனிக்கிழமை காலை 8.30 மணி தொடக்கம் பிற்பகல் 4 மணி வரை, ஒட்டுசுட்டான் மகா வித்தியாலயத்தில், இந்த நடமாடும் சேவை நடைபெறவுள்ளது” எனவும் அவர் கூறினார்.

“இந்த நடமாடும் சேவையின் போது, பிறப்பு, விவாகப் பதிவுகள், இறப்புப் பதிவுச் சான்றிதழ்கள், மோட்டார் வாகனச் சாரதி அனுமதிப் பத்திரம், காணிப் பிணக்குகளும் காணி அனுமதி பத்திரங்கள் தொடர்பான சேவைகள், பொலிஸ் திணைக்களத்தின் சேவைகள், வேலைவாய்ப்பு, அழகுக்கலை தொடர்பான ஆலோசனைகள் உட்பட மத்திய அரசு, மாகாண அரசு ஆகியவற்றின் கீழ் உள்ள 53 நிறுவனங்களின் சேவைகளை, இந்த நடமாடும் சேவையின் மூலம் பெற்றுக்கொள்ள முடியும்” என, அவர் மேலும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .