2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

’ஒரு பஸ் நிலையத்துக்கு இரு தடவைகள் அடிக்கல் நாட்டல்’

Niroshini   / 2021 டிசெம்பர் 06 , பி.ப. 01:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

ஒரு கட்டடத்துக்கு, இரு தடவைகள் அடிக்கல் நாட்டுவது அரசியல் நோக்கம் கொண்டதாக அமையும் என, கரைதுறைபற்று பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரும் தற்போதைய உறுப்பினருமான க.தவராசா தெரிவித்தார். 

இது தொடர்பில் தொடர்ந்துரைத்த அவர், முல்லைத்தீவு மாவட்ட மக்களுக்கு பஸ் நிலையம் அவசியமானது எனவும் பஸ் நிலையத்தின் கட்டட வேலைகள் முழுமையாக நிறைவு செய்யப்படாமலே திறப்பு விழா நடைபெற்றது எனவும் கூறினார்.

 பஸ் நிலையத்தின் மிகுதி வேலைகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது எனத் தெரிவித்த அவர்,  இந்நிலையில் பஸ் நிலையத்தின் மிகுதி வேலைகளுக்கும் தற்போது அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது எனவும் கூறினார்.
 
"ஒரு கட்டடத்துக்கு, இரு தடவைகள் அடிக்கல் நாட்டுவது என்பது அரசியல் நோக்கம் கொண்டதாக அமையும். மக்களுக்கு தேவை ஒரு சிறந்த பஸ் நிலையம்.  அதற்காக இரு தடவைகள் அடிக்கல் நாட்டுவதும் அதனை இரு தடவைகள் திறப்பதும் அரசியல் விழாக்களாகவே அமைகின்றன" எனவும் கூறினார்.

தற்போது இரண்டாவது தடவையும் அடிக்கல் நாட்டப்பட்டுள்ள பஸ் நிலையத்தின் முழுமையான வேலைகள் எப்போது நிறைவடையும் என வினவிய அவர்,  மக்களுக்கான பேருந்து நிலையம் எப்போது முழுமை பெறும் என்பவை வினாக்குறியாகவே உள்ளன எனவும் தெரிவித்தார்.

 காரணம், முல்லைத்தீவு பஸ் நிலையம் பல ஆண்டுகளாக முழுமை பெறாமலே காணப்படுகின்றமை மாவட்டத்தின் போக்குவரத்து துறையில் பெரும் பின்னடைவுகளை ஏற்படுத்தி உள்ளது, எனவும் க.தவராசா தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .