2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

ஒரே இரவில் நான்கு கோவில்களில் கைவரிசை

Niroshini   / 2021 ஜனவரி 05 , பி.ப. 07:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன்

வவுனியா - கந்தபுரம், தவசிகுளம் பகுதியில், நேற்றயதினம் (04) இரவு, நான்கு கோவில்களில் திருட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கந்தபுரம் பிள்ளையார் கோவில்இ அம்மன் கோவில்இபொன்னாவரசங்குளம் பிள்ளையார்கோவில்இ தவசிகுளம் வைரவர்இகோவில்களிலேயே குறித்த திருட்டுச்சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.

நேற்றயதினம் இரவு குறித்த கோவில்களுக்குள் உள்நுளைந்த திருடர்கள், அங்கிருந்த கதவை உடைத்து, உண்டியல்களை திருடிச்சென்றுள்ளதுடன்இ ஒலிபெருக்கி சாதனங்களையும் களவாடிச்சென்றுள்ளனர்.

சில கோவில்களில் உண்டியல்களை உடைத்து பணத்தை மாத்திரம் எடுத்துகொண்டுஇ உண்டியல்களை கோவில் வளாகத்திலேயே வீசிவிட்டு சென்றுள்ளனர்.

இது தொடர்பாக, வவுனியா குற்றத்தடுப்பு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .