2025 ஜூலை 07, திங்கட்கிழமை

ஓட்டுத் தொழிற்சாலை மீண்டும் இயங்க வேண்டும்

Niroshini   / 2016 செப்டெம்பர் 20 , மு.ப. 05:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன், சண்முகம் தவசீலன்

முல்லைத்தீவு - ஒட்டுசுட்டான் ஓட்டுத் தொழிற்சாலையை மீண்டும் இயங்க வைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி. சாந்தி சிறிஸ்கந்தராஜா தெரிவித்தார்.

ஒட்டுசுட்டான் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் திங்கட்கிழமை (19) பிரதேச செயலகத்தில் நடைபெற்றபோது, அவர் இந்தக் கோரிக்கையை முன்வைத்தார்.

முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் உள்ள ஓட்டுசுட்டான் பண்டாரவன்னியன் ஓட்டுத்தொழிற்சாலை கடந்த கால யுத்தத்தின் பின்னரான மீள்குடியமர்வைத் தொடர்ந்து இதுவரை மீள இயங்கவைப்பதற்கு நடவடிக்கைகள் எதுவும் எடுக்;கப்படவில்லை.

இத்தொழிற்சாலையை மீண்டும் இயங்;க வைப்பதற்கு உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன்மூலம் இங்குள்ளவர்களுக்கு தொழில் வாய்ப்;பை ஏற்படுத்திக் கொடுக்க முடியும் என்றார்.

இந்தத் தொழிற்சாலை மற்றும் பனை அபிவிருத்திச் சபை என்பன எனது அமைச்சின் கீழிருந்த எடுக்கப்பட்டுள்ளதாக, ஒருங்கிணைப்புக்குழுவின் இணைத்தலைவரும் கைத்தொழில், வணிக அமைச்சர் றிசாட் பதியுதீன் தெரிவித்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .