Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2017 ஏப்ரல் 01 , மு.ப. 07:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
பொன் ஆனந்தம்
வட மாகாணத்திலுள்ள முல்லைதீவு பிரதேசத்தில் முன்னர் இயங்கி வந்த ஓட்டுத்தொழிற்சாலையை மீள இயக்குமாறு கோரிக்கை விடப்பட்டுள்ளது.
யொவன்புர இளைஞர் விளையாட்டு விழாவைப் பார்வையிட வந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் இக்கோரிக்கை விடப்பட்டுள்ளது.
பிரதமரது தலைமையில் நேற்று (01) மாலை 4. மணியளவில் நடந்த இளைஞர் நாடாளுமன்ற பிரதிநிதிகளுக்கான கேள்வி நேரத்தில், முல்லைதீவு இளைஞர்கள் சார்பாக இக்கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
மல்லைத்தீவு மாவட்டத்தின் சார்பில் கருத்து வெளியிட்ட இளைஞர் நாடாளுமன்ற உறுப்பினர் குறிப்பிடுகையில், நீண்ட காலமாக முல்லைத்தீவு ஒட்டிச்சுட்டானில் இயங்கி வந்த ஓட்டுத்தொழிற்சாலை முடப்பட்ட நிலையில் இயங்காமலுள்ளது.
எமது இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்கும் வகையில், அதனை மீள இயங்க வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதனை இயங்க வைப்பதன் மூலம் முல்லைத்தீவிலுள்ள ஆயிரக்கணக்கான இளைஞர்கள் பயன் பெற வாய்ப்பாக அமையும் எனக் கோரிக்கை முன்வைத்தனர்.
13 minute ago
4 hours ago
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
4 hours ago
5 hours ago
5 hours ago