Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
Editorial / 2019 டிசெம்பர் 22 , பி.ப. 05:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.றொசேரியன் லெம்பேட்
மன்னார் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஓட்டோக்களையும் பாதுகாப்பு பரிசோதனைக்கு உட்படுத்தி பதிவுகளை மேற்கொள்ளும் நடவடிக்கையானது, மன்னார் மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் பந்துல வீரசிங்க தலைமையில், இன்று காலை 10 மணிக்கு, மன்னார் பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.
நாடளாவிய ரீதியில் பாதுகாப்பை பலப்படுத்தும் விதமாக பொலிஸ் திணைக்களத்தின் அறிவித்தலின் படி பாவனையில் உள்ள ஓட்டோக்களை பதிவு செய்வதுடன், புதிய பதிவு இலக்கம் வழங்கப்பட்டு அடிப்படை பதுகாப்பு தொடர்பான அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டுவருகின்றது.
குறித்து செயற்றிட்டத்தின் முதல் கட்டமாக மன்னார் நகர் பகுதிகளில் தொழில் ரீதியாக பாவனையில் உள்ள சுமார் 100க்கும் மேற்பட்ட ஓட்டோக்களுக்கு பதிவுகள் மேற்கொள்ளப்பட்டதுடன், பதிவு இலக்கங்களும் வழங்கப்பட்டுள்ளன.
அத்துடன் தொடர்சியாக மாவட்டம் முழுவதும் உள்ள ஓட்டோக்கள் பதிவு செய்யப்பட இருப்பதுடன், உரிமையாளர்கள் தொடர்பான விவரங்களும் திறட்டப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
8 hours ago
18 May 2025