2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

ஓமந்தையில் ஆலய விக்கிரகங்கள் சேதம்

Princiya Dixci   / 2016 ஜூலை 03 , பி.ப. 02:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன்

வவுனியா, ஓமந்தை வேலர்சின்னக்குளத்தில் அமைந்துள்ள புராதன வீரபத்திரர் ஆலயத்தின் விக்கிரகங்கள் மற்றும் கட்டடங்கள் இனந்தெரியாதோரால் உடைக்கப்பட்டுள்ளதாக இன்று ஞாயிற்றுக்கிழமை (03) முறைப்பாடு கிடைத்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

புராதன ஆலயமான இவ் ஆலயத்தில் மிக அண்மைக்காலத்தில் தான் புதிய கட்டடங்கள் அமைக்கப்பட்டு பரிவார மூர்த்திகள் பிரதிஸ்டை செய்யப்பட்டிருந்த நிலையில் அச்சிலை உடைக்கப்பட்டுள்ளதுடன், அருகிலிருந்த வேல்களும் அகற்றி எறியப்பட்டுள்ளன.

இதேவேளை, ஆலயத்தில் புதிதாக அமைக்கப்பட்டு வந்த கட்டடம் ஒன்றும் இடிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .