2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

ஓமந்தையில் கைக்குண்டு மீட்பு

Editorial   / 2022 ஜனவரி 19 , பி.ப. 05:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

க.அகரன்

வவுனியா - ஓமந்தை, நாவற்குளம் பகுதியில் கைக்குண்டு ஒன்று, இன்று (19) மீட்கப்பட்டுள்ளது.

ஓமந்தை, நாவற்குளம் பகுதியில் உள்ள தனியார் காணியில் துப்புரவு செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டபோதே, குறித்த கைக்குண்டு அவதானிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக காணி உரிமையாளரால் ஓமந்தை பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து, குறித்த கைக்குண்டை அகற்றி, அதனை செயலிழக்கச்செய்யும் நடவடிக்கை பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இது தொடர்பான மேலதிக விசாரணை, ஓமந்தை பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .