2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

குஞ்சுக்குளம் நுழைவாயில் திறந்துவைப்பு

George   / 2016 செப்டெம்பர் 15 , பி.ப. 12:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

மன்னார்-மதவாச்சி பிரதான வீதில் உள்ள குஞ்சுக்குளம் கிராமத்துக்கு செல்லும் பிரதான பாதையில் அமைக்கப்பட்டுள்ள நுழைவாயில், நேற்று புதன்கிழமை(14) மாலை, மன்னார் மறைமாவட்ட அப்போஸ்தலிக்க பரிபாலகர் அருட்கலாநிதி கிங்சிலி சுவாம்பிள்ளை ஆண்டகையினால் திறந்து வைக்கப்பட்டது.

குஞ்சுக்குளம் கிராம மக்களின் பூரண ஒத்துழைப்புடன் அமைக்கப்பட்ட குறித்த நுழைவாயில் திறப்பு நிகழ்வு, குஞ்சுக்களம் பங்குத்தந்தை அருட்தந்தை இ.அன்டனி சோசை தலைமையில் இடம்பெற்றது.

இதன்போது, மன்னார் மறைமாவட்ட அப்போஸ்தலிக்க பரிபாலகர் அருட்கலாநிதி கிங்சிலி சுவாம்பிள்ளை ஆண்டகையுடன் இணைந்த அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், வடமாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி எஸ்.பிறிமுஸ் சிறாய்வா, மடு பிரதேசச் செயலாளர் எப்.சி.சத்தியசோதி, கிராம மக்கள், கிராம அலுவலகர் ஆகியோர் கலந்துக்கொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .