2025 ஜூலை 07, திங்கட்கிழமை

காடுகள் வழியாக கால்நடைகள் கடத்தல்

Princiya Dixci   / 2016 ஒக்டோபர் 06 , மு.ப. 05:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

- நடராசா கிருஸ்ணகுமார்

முல்லைத்தீவு மாவட்டத்தின் கால்நடைகள் காடுகள் வழியாக கடத்தப்படுவதாக வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சி. சிவமோகன் தெரிவித்தார்.  

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது,

'முல்லைத்தீவு மாவட்டத்தில், அதிகளவான கால்நடைகள் கடந்த காலப் போரினால் அழிவடைந்துள்ளன. மீள்குடியேற்றத்தின் பின்னர் யாழ்ப்பாணம் போன்ற இடங்களிலிருந்து நெருக்கடிகளுக்கு மத்தியில் கால்நடைகளை கொண்டுவந்து வளர்த்து வருகின்றனர்.

இந்நிலையில், கால்நடைகளைக் களவாகக் காடு வழியாகக் கடத்தி பிறவிடங்களுக்குக் கொண்டு செல்லப்படுவதாக, தொடர்ச்சியாக மக்கள் முறைப்பாடுகள் தெரிவிக்கப்படுகின்றன.

மாந்தைகிழக்கு காடுகள் வழியாக கால்நடைகள் வவுனியா, மன்னார் போன்ற பகுதிகளுக்குக் கடத்தப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இவை தொடர்பாகப் பொலிஸார் இறுக்கமான நடவடிக்கைகள் எடுக்காத நிலையில் கால்நடைகள் கடத்தப்படுவதையும் அழிக்கப்படுவதையும் தடுக்க முடியாது' என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .