2025 ஜூலை 07, திங்கட்கிழமை

காட்டுத் தீயில் 20 ஏக்கர் கருகியது

George   / 2016 செப்டெம்பர் 21 , மு.ப. 10:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரொமேஸ் மதுசங்க

வவுனியா பூவரசங்குளம் வேளாங்குளம் சிவநகர் வனப்பகுதியில் செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட தீ காரணமாக சுமார் 20 ஏக்கருக்கும் அதிகமான வனப்பகுதி தீயினால் எரிந்து நாசமடைந்துள்ளதாக தீணை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர உதவிய, வேளாங்குளம்  விமானப்படை முகாம் வீரர்கள் தெரிவிக்கின்றனர்.

செவ்வாய்க்கிழமை பிற்பகல் 1 மணியளவில் ஏற்பட்ட தீ 2 மணியாகும்போது பாரியளவில் பரவியுள்ளது இதனை கண்ட பிரதேசவாசிகள் வேளாங்குளம் விமானப்படை முகாம் வீரர்களுக்கு அறிவித்துள்ளனர்.

அதன்பின்னர் பூவரசங்குளம் பொலிஸாருக்கு, விமானப்படையினர் அறிவித்ததுடன் சுமார் 30 வீரர்கள் தீணை அணைக்கும் பணியில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .