Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 16, புதன்கிழமை
Kogilavani / 2017 ஏப்ரல் 18 , பி.ப. 03:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரொமேஷ் மதுசங்க
வவுனியா – கொம்புவைத்தகுளம் பகுதியில் காட்டு யானையொன்றின் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்ட வன ஜீவராசிகள் திணைக்கள உத்தியோகத்தர், கடமையிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெறுவதாகஇ அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா தெரிவித்தார்.
ஒமந்தை – கொம்புவைத்தகுளம் பகுதியிலுள்ள விவசாயக் கிணற்றில், ஞாயிற்றுக்கிழமை மாலை இரண்டு யானைக் குட்டிகள் உள்ளடங்களாக நான்கு யானைகள் வீழ்ந்திருந்தன.
பிரதேச மக்களும் ஒமந்தை பொலிஸாரும் இணைந்து, அன்றிரவே இரண்டு குட்டியானைகளை மீட்டனர்.
எனினும் இரண்டு யானைகளை மீட்கும் பணி அடுத்த நாள் காலையே முன்னெடுக்கப்பட்டது. வவுனியா வனஜீவராசிகள் திணைக்கள உத்தியோகத்தர்கள் இணைந்து மேற்படி இரண்டு யானைகளையும் மீட்கும் பணியில் ஈடுபட்டனர். யானைகளை மீட்பதற்காக பெக்கோ வண்டியும் பயன்படுத்தப்பட்டது.
மிகுந்த பிரயத்தனத்தின் மத்தியில் இரண்டு யானைகளை மீட்டப் போதிலும், யானைகள் காட்டுக்குச் செல்வதற்கான வீதியில் பெக்கோ இயந்திரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததால் அவற்றால் காட்டுக்குள் செல்ல முடியவில்லை. இதனால், யானை ஒன்று பெக்யோ இயந்திரத்தை தாக்க முயன்றுள்ளது. இதன்போது, வன ஜீவராசிகள் திணைக்கள உத்தியோகத்தர் ஒருவர் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒரு யானை உயிரிழந்தது.
இச்சம்பவத்துடன் தொடர்புடைய வனஜீவராசிகள் திணைக்கள உத்தியோகத்தரே, கடமையிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago