Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 05, சனிக்கிழமை
Niroshini / 2016 ஜூன் 20 , மு.ப. 04:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.றொசேரியன் லெம்பேட்
'எந்த மக்களின் உரிமைகளுக்காக போராளிகள் இரத்தம் சிந்தினார்களோ அந்த சிந்தனைகளை நிலை நாட்டுவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மக்கள் பிரதிநிதிகள் அனைவரும் ஒன்றுபட்டு செயற்படுவதன் மூலம் அவர்களின் கனவுகளை நனவாக்க முடியும்' என ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் மாவட்ட அமைப்பாளர் எஸ்.ஆர்.குமரேஸ் தெரிவித்தார்.
ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் தோழர் க.பத்மநாபா மற்றும் போராளிகளின்; 26ஆவது நினைவு தினம் ஞாயிற்றுக்கிழமை(19) காலை மன்னாரில் அனுஷ்டிக்கப்பட்டது. இதன்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இங்கு தொடர்ந்து உரையாற்றி அவர்,
'ஈழ விடுதலைப்போராட்டத்தின் மத்தியில் ஆயுதம் ஏந்திய ஏனைய போரளிகள் ஜனநாயக வழியில் வந்து அரசியல் நீரோட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர். அந்த பெருமை ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் தோழர் க.பத்மநாபாவையே சாரும்.
இந்த போராட்ட கால கட்டத்தில் தமிழ் மக்களுக்காக ஒரு அரசியல் ரீதியாக உரிமைகளை வென்றெடுப்பதற்காக ஜனநாயக நீதியாக வந்து அதன் பின் உறுவாக்கப்பட்டது தான் வட, கிழக்கு இணைந்த மாகாண சபை. பல்வேறுபட்ட தியாகங்களை அர்ப்பணிப்புக்களை செய்து, இந்த மாகாண சபையை தோழர்; பத்மநாபர் வழி நடத்தி சென்றார்.
அன்று பொலிஸ், காணி அதிகாரம் குறைந்த ஒரு மாகாண சபையாக வட, கிழக்கு இணைந்த மாகாண சபை இருந்தது. ஆனால், இன்று இருக்கக்கூடிய மாகாண சபை என்பது வட, கிழக்கு பிரிக்கப்பட்டு, காணி அதிகாரம், பொலிஸ் அதிகாரம் அற்ற மாகாண சபையாக இருக்கின்றது' என்றார்.
'இன்று நாங்கள் மாகாண சபைக்கு அதிகாரங்களை கேட்டு மத்திய அரசாங்கத்திடம் போராடிக்கொண்டிருக்கும் இந்த நிலையில், ஒரு தூர நோக்குடன் எங்களிடம் இருக்கின்ற ஒரு குறைந்த பட்ச அதிகாரத்தைக்கூட மத்திய அரசாங்கத்துக்கு தாரை வார்க்கின்ற சில நிகழ்ச்சி நிறல்களின் கீழ் எமது அமைச்சர்களில் சிலர் செயற்பட்டு வருகின்றனர்.
குறிப்பாக, வடமாகாண சுகாதார அமைச்சர் இன்று வவுனியாவில் விவசாய காணியை மத்திய அரசாங்கத்திற்கு கொண்டு செல்வதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகின்றார்.
பொருளாதார மத்திய நிலையம் என்பது மத்திய அரசாங்கத்தோடு சம்மந்தப்பட்டதாக காணப்படுகின்றது. மாகாண சபைக் கூறிய காணிக்குள் அதனை அமைக்கும் போது குறித்த காணியையும் சேர்த்து மத்திய அரசாங்கம் அபகரிப்பு செய்யும்.
மாகாண சபை காணி அதிகாரம் தேவை என போராடிக்கொண்டிருக்கின்ற நிலையில் எங்களிடம் இருக்கின்ற காணிகளைக்கூட மத்திய அரசாங்கத்துக்கு கொடுக்கின்ற செயற்பாடுகளுடன் எமது அமைச்சர்கள் சிலர் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களின் சிந்தனைகள் மாற வேண்டும். மக்களின் நலன்களில் இருந்து முடிவெடுக்க வேண்டும்' எனவும் குறிப்பிட்டார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
04 Jul 2025